உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபுதேவாவின் 'ரேக்ளா'

பிரபுதேவாவின் 'ரேக்ளா'

இயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் பிஸியாக உள்ளார் பிரபுதேவா. தற்போது பஹீரா படத்தில் நடித்துள்ளார். இதுதவிர இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து 'ரேக்ளா' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதை வால்டர் படத்தை இயக்கிய அன்பு இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கிறார். இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக இந்த படம் தயாராகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !