மாலத்தீவில் 'மறைத்த' பிகினியுடன் மாளவிகா மோகனன்
மாலத்தீவையும், நடிகைகளையும் பிரிக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு கடந்த இரண்டு வருடங்களாக அங்கு சுற்றுலா செல்லும் இந்திய சினிமா நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பெரும்பாலும் பல நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் இப்படி இந்திய நடிகைகளை ஸ்பான்சர் செய்து அழைத்து வந்து அவர்களது விளம்பரங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
சமூகவலைதளத்தில் தங்கள் சுற்றுலா பற்றி பதிவிடும் போது அவர்கள் தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் பெயர்கள் தவறாமல் குறிக்கப்படுவதை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 'மாஸ்டர், மாறன்' கதாநாயகியாக மாளவிகா மோகனன் மாலத் தீவிற்கு தற்போது சுற்றுலா சென்றுள்ளார்.
பொதுவாகவே அடிக்கடி கவர்ச்சிகரமான சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர் மாளவிகா மோகனன். மாலத்தீவு சுற்றுலா செல்லும் நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களில் ஒரு சில பிகினி புகைப்படங்கள் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். அந்த விதத்தில் மாளவிகா மோகனனும் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், அது மறைக்கப்பட்ட பிகினி புகைப்படமாகவே இருக்கிறது. அதற்கு புகைப்படம் எடுத்தவரைத்தான் பாராட்ட வேண்டும்.