லிங்குசாமி படத்தின் இந்தி உரிமம் 16 கோடிக்கு விற்பனை
ADDED : 1350 days ago
லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் தி வாரியர். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது.
இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமை 16 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இது படத்தின் தயாரிப்பு தரப்பு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம் பொத்தனேனியின் படம் இவ்வளவு பெரிய தொகைக்கு டப்பிங் உரிமை விற்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதில் ராம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.