யானையின் டிஜிட்டல் உரிமம் விற்பனை
ADDED : 1350 days ago
ஹரி இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் படம் யானை. இதில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். டிரம் ஸ்டிக் நிறுனத்தின் சார்பில் எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். மதுரை, பழனி, ராமநாதபுரம் பகுதிகளில் நடந்து இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளிவரும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கி உள்ளது. படம் தியேட்டரில் வெளியான பிறகு ஜீ5 ஓடிடி தளத்திலும் ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல்களிலும் ஒளிபரப்பாகிறது.