மவுனி ராய்க்கு டும் டும்
ADDED : 1382 days ago
நாகினி சீரியலில் இச்சாதாரி பாம்பாக நடித்து பிரபலமானவர் நடிகை மவுனி ராய். பாலிவுட்டில் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலரான சுராஜ் நம்பியாரை திருமணம் செய்துள்ளார். துபாயில் தொழில் அதிபராக உள்ள சுராஜை கடந்த 2019ல் புத்தாண்டு அன்று சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், காதலாகி இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது.