'தாயில்லாமல் நானில்லை!' கலங்க செய்த செந்தில் கணேஷ்
ADDED : 1394 days ago
தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல மவுசு அதிகரித்துள்ளது. புதிய கான்செப்ட்டுகளில் புதுப்புது நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் 'தாயில்லாமல் நானில்லை' என்ற புதிய நிகழ்ச்சி வரவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தான் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தனது அம்மாக்களுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியானது. அதில், செந்தில் தனது அம்மாவுடன் கலந்து கொள்கிறார். மேலும் அம்மாவை நினைத்து செண்டிமெண்ட்டான பாடலையும் பாடியுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் அந்த புரோமோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தாயில்லாமல் நானில்லை வருகிற ஞாயிறு முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.