நடிகர் விஜய்க்கு அபராதம் நிறுத்தி வைப்பு
ADDED : 1361 days ago
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு அபராதம் செலுத்துவதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி தமிழக அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை பிப்.,1க்கு ஒத்திவைத்தனர். அதுவரை அபராதம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.
ரூ.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு முதலில் நுழைவு வரி செலுத்த மறுப்பு தெரிவித்த விஜய் பின்னர் ரூ.7.98 லட்சம் வரி செலுத்தினார். இந்த கால தாமதத்திற்காக 400 சதவீதம் அபராதம் விதித்து ரூ.30.23 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.