திடீரென மாற்ற முடியாது - விஜய் பற்றி வனிதா
ADDED : 1347 days ago
சினிமா கேரியரில் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள வனிதா விஜயகுமார் வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஷூட்டிங், மூவி புரோமோஷன் என பிசியாக வலம் வரும் வனிதா, சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் பேசியுள்ள வனிதா, 'விஜய்யுடன் நான் நடித்த காலக்கட்டங்களில் அவரிடம் எப்படி பேசினேனோ அப்படியே தான் இன்றைக்கு பேசுவேன். திடீரென்று அவரை அவர் இவர் என்று மரியாதையுடன் பேசுவதாக நினைத்து மாற்றி பேச முடியாது. இன்று நான் அவரிடம் பேசுவதை நினைத்து பலருக்கு நான் ஏதோ மரியாதை குறைவாக திமிரில் பேசுவதாக தோன்றலாம். ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே அவருடன் அப்படி தான் பேசி பழகியிருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இதனால், சில விஜய் ரசிகர்கள் வனிதா மீது கோபமடைந்துள்ளனர். அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.