மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்
ADDED : 1351 days ago
டாக்டர் படத்தை அடுத்து டான் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை ஜதிரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா - நாக சைதன்யா இணைந்து நடித்த பங்கார் ராஜு என்ற படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே தயாரித்த மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.