உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் அறிமுகமாகும் ரெடின் கிங்ஸ்லி

தெலுங்கில் அறிமுகமாகும் ரெடின் கிங்ஸ்லி

கோலமாவு கோகிலா படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. அதன்பிறகு அவர் சில படங்களில் நடித்தாலும் டாக்டர் படத்தின் மூலம் பிரபரமானார். அவரது தனித்தன்மையான வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அனைவருக்கும் பிடித்து விட்டது. தற்போது காமெடி நடிகராக வேகமாக வளர்ந்து வருகிறார். கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறது.

இந்த நிலையில் தி வாரியர் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இந்த படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார். தமிழிலும் வெளிவருகிறது. ராம் பொதினேனி, கிருத்தி ஷெட்டி, ஆதி மற்றும் அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி தற்போது விஜய்யுடன் பீட்ஸ் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிம்புவின் 'பத்து தலை' மற்றும் விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இரு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !