உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாலினி அஜித் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு

ஷாலினி அஜித் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்குமார் - ஷாலினி ஆகிய இருவரும் சோசியல் மீடியாவில் இதுவரை கணக்கு தொடங்கவில்லை. என்றாலும் அஜித் பெயரில் ஏராளமான போலி வலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக இது போன்ற கணக்குகளை அஜித்தின் ரசிகர்கள் தொடர வேண்டாம் என்று ஏற்கனவே அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அஜித் மனைவி ஷாலினி பெயரிலும் போலி டுவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா கூறுகையில், ஷாலினி அஜித்குமார் பெயரில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்திருப்பவர், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த கணக்கு போலியானது. அதனால் அந்தக் கணக்கை யாரும் பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !