மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1312 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1312 days ago
அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், டிம்பிள் ஹயாத்தி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படம் நாளை பிப்ரவரி 4ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகிறது.
தமிழில் நவம்பர் 25ல் வெளிவந்த 'மாநாடு' படத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வரவில்லை. டிசம்பர் 3ம் தேதி வெளிவந்த ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'பேச்சுலர்' படம் ஓரளவிற்கு வெற்றியைப் பெற்றது.
கடந்த வருட டிசம்பர் மாதத்தில் வெளிவந்த மற்ற படங்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக ரசிகர்கள் வரவில்லை. பல படங்கள் ஓரிரு நாட்கள், ஓரிரு காட்சிகளில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன.
இந்த வருடம் ஜனவரி மாத ஆரம்பமே கொரோனா பாதிப்பால் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஜனவரி மாதத்தில் வெளிவந்த படங்களுக்கும் மக்கள் தியேட்டர்கள் பக்கமே வரவில்லை. மிக மிகக் குறைவாகவே வந்தார்கள். அதனால், பல தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' படம் நாளை வெளிவருவதால் கடந்த இரண்டு மாத கால சோதனையை இந்தப் படம் மாற்றும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். படத்தின் டீசர், டிரைலர் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்துடன் 'யாரோ, சாயம்' ஆகிய படங்களும் தியேட்டர்களில் வெளியாகின்றன. ஓடிடியில் 'பன்றிக்கு நன்றி சொல்லி' படம் வெளியாகிறது.
1312 days ago
1312 days ago