விலங்கு: விமல் நடிக்கும் வெப் சீரிஸ்
ADDED : 1353 days ago
கடந்த பல ஆண்டுகளாகவே விமலுக்கு சரியான படங்களும், வெற்றியும் அமையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சல, காவல், மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2, கன்னி ராசி படங்கள்கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, குலசாமி, லக்கி, மஞ்சள் குடை படங்கள் வளர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் வெப் சீரிசுக்கு வந்திருக்கிறார் விமல். அவர் நடிக்கும் விலங்கு என்ற வெப் சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கிறார். விமலுடன் பால சரவணன், முனீஷ்காந்த், இனியா உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 18ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.