ஹிந்திக்கு செல்லும் விஜய் ஆண்டனி : சந்தோஷ் சிவன் இயக்கம்
ADDED : 1389 days ago
தமிழில் ரோஜா, இருவர், உயிரே, துப்பாக்கி, அஞ்சான் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தவிர தி டெரரிஸ்ட், மல்லி, உருமி, இனம், ஜாக் அண்ட் ஜில், கலியுகம் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தை ஹிந்தியில் 'மும்பைகர்' என்ற பெயரில் ரீமேக் செய்து, இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் அடுத்து சந்தோஷ் சிவன் தமிழ், ஹிந்தியில் தயாராகும் ஒரு படத்தை இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இருமுகன், புலி படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விஜய் ஆண்டனியும் ஹிந்திக்கு செல்கிறார்.