உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லதா மங்கேஸ்கருக்காக வெங்கட்பிரபு எடுத்த முடிவு

லதா மங்கேஸ்கருக்காக வெங்கட்பிரபு எடுத்த முடிவு

மாநாடு வெற்றிப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு தான் இயக்கும் 10வது படத்திற்கு ‛மன்மத லீலை' எனப் பெயரிட்டுள்ளார். நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இன்று (பிப்.,6) இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என வெங்கட்பிரபு அறிவித்தார். இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு காரணமாக கிளிம்ப்ஸ் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !