இசையமைப்பாளராகும் மிஷ்கின்
ADDED : 1340 days ago
அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு போன்ற படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பிசாசு 2' படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தனது தம்பி இயக்கவுள்ள ஒரு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின்.
தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் தயாரிப்பாளர், நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.