கடற்கரையில் தேவதை போல் போஸ் கொடுத்த லாஸ்லியா!
ADDED : 1385 days ago
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார் லாஸ்லியா மரியநேசன். ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக இருந்த லாஸ்லியா தற்போது மிகவும் மாடலாகி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவமாய் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில், கடற்கரை மணலில் வெள்ளை உடையில் கையில் பெரிய ரோஜாவுடன் காத்திருக்கும் அழகிய தேவதையாக நிற்கும் லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்தார். அதன் பின் தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி அவருக்கு பேரையும் புகழையும் பெற்று தந்தது. லாஸ்லியா தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்துள்ளார்.