கண்பார்வையற்றவர் வேடத்தில் நிவேதா பெத்துராஜ்
ADDED : 1436 days ago
ஒரு நாள் கூத்து, திமிரு புடிச்சவன், டிக் டிக் டிக் என பல படத்தில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். மெண்டல் மதிலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளத்துக்காக தயாராகும் பிளடி மேரி என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கண்பார்வை இல்லாத வேடத்தில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் தனது உறவுகளை காப்பாற்ற போராடும் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார்.