மீண்டும் துவங்கும் பிரபாஸ் - தீபிகா படுகோனே படம்
தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கும் சயின்ஸ் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ப்ராஜெக்ட் கே(தற்காலிகமாக) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மீண்டும் தொடங்குகிறது. அப்போது பிரபாஸ் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
தற்போது பிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், அதையடுத்து அவர் நடித்து வந்த ஆதி புருஷ், சலார் படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் புராஜெக்ட் கே படத்தில் முழுவீச்சில் நடித்து முடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறார்.