உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐஸ்வர்யா

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐஸ்வர்யா

தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்ததை அடுத்து காதலர் தினத்திற்காக ஒரு ஆல்பம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டார் நடிகர் ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா. இதற்காக ஐதராபாத் சென்று ஆலோசனை நடத்தினார். ஆனால் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினி கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நாளை முதல் ஐதராபாத் சென்று ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பை தொடங்குகிறார். மூன்று நாட்கள் இதற்கான படப்பிடிப்பை நடத்தி காதலர் தினத்திற்குள் இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !