கன்னட கலைஞர்கள் உருவாக்கும் தமிழ் படம்
ADDED : 1336 days ago
தென்னிந்திய மொழி படங்களை கன்னடத்தில் வெளியிடும் பிரபல விநியோகஸ்தர் குமார் தயாரிக்கும் தமிழ் படம் மாபியா. இதனை கன்னடத்தில் மம்மி, தேவகி படங்களை இயக்கிய லோகித் இயக்குகிறார். கன்னட நடிகர் பிரஜ்வால் தேவராஜ் நடிக்கிறார். அவருடன் அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூபட செலின் இசை அமைக்கிறார். அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் லோகித் கூறியதாவது: இது மாபியா பற்றிய கதைகளில் சொல்லப்படாதவைகளாக இருக்கும். அத்துடன் மாபியா கதைகளுக்குரிய விறுவிறுப்புக்கும், ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது நான் இயக்கும் முதல் நேரடி தமிழ் படம். கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. என்றார்.