பாடகர் வேல்முருகனுக்கு கிடைத்த கவுரவம்
ADDED : 1387 days ago
கடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புற இசை பாடகருமான வேல்முருகனுக்கு தர்மபுரம் ஆதினத்தால் ‛கிராமிய இசை கலாநிதி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும், தர்மபுரம் ஆதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கே.ஜே.யேசுதாஸ் இப்பொறுப்பில் இருந்துள்ளார். முதல்முறையாக நாட்டுப்புற பாடகரை சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.