காதலில் விழுந்தாரா பிரேம்ஜி?
ADDED : 1339 days ago
இசை அமைப்பாளர் கங்கை அமரனின் இளையமகன் பிரேம்ஜி. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி. காமெடியனாக நடித்து வரும் பிரேம்ஜி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு இசையும் அமைத்தும் உள்ளார்.
42 வயதான பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளவில்லை. இனி திருமணம் செய்யப்போவதில்லை என்றும் சமீபத்தில் அறிவித்தார். ஆனால் அவரும் பாடகி வினய்தாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கில்லாடி, ஆதலினால் காதல் செய்வீர் ஆகிய படங்களில் பாடி உள்ளார் வினய்தா. இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக உள்ள போட்டோ இணையதளங்களில் வைரலாகின