தியேட்டருக்கு வெளியே ரூ.22 கோடி சம்பாதித்த எப்ஐஆர் : விஷ்ணு விஷால் தகவல்
ADDED : 1439 days ago
விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் எப்ஐஆர். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கவுதம் மேனன் நடித்துள்ளனர். நாளை(பிப்., 11) இந்த படம் வெளிவருகிறது.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்த படத்தை நல்ல லாபத்துக்கு விற்றதாகவும், படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் விஷ்ணு விஷால் தனது பேட்டியில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து படம் வியாபாரமான தொகை குறித்து வெவ்வேறு விதமான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.
இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் தெரிவித்திருப்பதாவது: எப்ஐஆர் வணிகம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. படம் வெளியீட்டுக்கு முன்பே தியேட்டர்கள் அல்லாத விற்பனையாக 22 கோடிக்கு விற்பனையானது மகிழ்ச்சியாக இருக்கிறேன். பார்வையாளர்களின் அன்பே இறுதி தீர்ப்பு என்கிறார்.