உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காரைக்குடியில் ‛எஸ்கே 20' துவங்கியது

காரைக்குடியில் ‛எஸ்கே 20' துவங்கியது

அனுதீப் இயக்கத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக எஸ்கே 20 என பெயரிட்டுள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் இன்று(பிப்., 10) துவங்கியது. ஒரேக்கட்டமாக காரைக்குடி, புதுச்சேரியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் சார்பில் நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சாந்தி டாக்கீஸின் அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !