மேலும் செய்திகள்
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!
1327 days ago
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
1327 days ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
1327 days ago
விஷ்ணு விஷால் நடிப்பில் வரும் பிப்-11ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் எப்ஐஆர். மனு ஆனந்த் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குனர் கவுதம் மேனனிடம் எட்டு வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அந்த குரு விசுவாசத்தின் பேரில் கவுதம் மேனனையும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் மனு ஆனந்த்.
கவுதம் மேனனுடன் பணியாற்றிய எட்டு வருடங்களில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் அஜித்துடன் இணைந்து பணியாற்றி அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு மனு ஆனந்த்திற்கு கிடைத்தது.. அந்த சமயத்தில் அஜித் அவ்வப்போது சொன்ன ஆலோசனைகளும் அறிவுரைகளும் இந்த எப்ஐஆர் பட உருவாக்கத்தின்போது ரொம்பவே பயன்பட்டது என கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்..
அஜித் படத்தை இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ள மனு ஆனந்த், இப்போதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை.. அவர் மீது நடிகராகவும் தனிப்பட முறையிலும் மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன். ஒருவேளை அவரது படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக எனக்கு இருக்கும் என கூறியுள்ளார் மனு ஆனந்த்.
1327 days ago
1327 days ago
1327 days ago