பாகுபாடு எதற்கு - ஸ்ருதி காட்டம்
ADDED : 1392 days ago
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கிறார். தற்போது வெப்சீரிஸிலும் கால் பதித்துள்ளார். மும்பையில் காதலருடன் வசித்து வரும் இவர் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடத்தில் தென்னிந்தியாவிலிருந்த வந்த நீங்கள் எப்படி ஹிந்தி பேசுகிறீர்கள் என ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு, ‛‛தென்னிந்திய என்ன வேற்று கிரகமா. தென்னிந்தியா, வட இந்தியா என பாகுபாடு எதற்கு? அனைவரும் படம் எடுக்கிறோம், உழைக்கிறோம். 2022ல் இதுபோன்று பாரபட்சம் பார்க்க நேரமில்லை'' என காட்டமாக பதிலளித்துள்ளார் ஸ்ருதி.