கேஜிஎப்-2 டப்பிங்கை முடித்தார் ரவீனா டாண்டன்
ADDED : 1360 days ago
தமிழில் ஆளவந்தான், சாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். தற்போதும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் கேஜிஎப் 2' படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் ராமிகா சென் என்கிற பெயரில் நடித்துள்ளார் ரவீனா.
இந்தப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப்படத்தில் தனக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார் ரவீனா. இந்த தகவலை புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் பிரசாந்த் நீல், எங்களது கூலான பிரதமருக்கு நன்றி என கூறியுள்ளார். யஷ் ஹீரோவாக நடிக்க, சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ள இந்தப்படம் ஏப்ரல்-14ல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.