11 கிலோ வெயிட் குறைத்த சமீரா ரெட்டி
ADDED : 1413 days ago
தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, அசல் உள்பட பல படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இவர் 2014ஆம் ஆண்டு அக்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சமீரா ரெட்டி இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக உள்ளனர். மேலும் திருமணத்திற்கு பிறகு சமீரா ரெட்டியின் உடல்கட்டு தாறுமாறாக வெயிட் போட்டு விட்டது. 92 கிலோ வெயிட் இருப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் தற்போது உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி மூலம் 11 கிலோ குறைத்து தான் 81 கிலோ ஆகியிருப்பதாக தெரிவித்துள்ளார் சமீரா ரெட்டி. அதோடு தனது உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்த தகவலையும் ரசிகர்களுக்கு டிப்ஸாக வெளியிட்டுள்ளார்.