சிபிராஜ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வித்யாசகரின் மகன்
ADDED : 1550 days ago
நடிகர் சிபிராஜ் தற்போது மாயோன், ரேன்ஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாண்டியன் ஆதிமூலம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் சிபிராஜின் 20வது படமாக உருவாகிறது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் சிபிராஜ் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.