தயாரிப்பாளரான இயக்குனர் விஜய் சந்தர் - படப்பிடிப்பு ஆரம்பம்
ADDED : 1434 days ago
வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர், தற்போது ஹன்சிகாவை வைத்து தனது முதல் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை கூகுள் குட்டப்பன் பட இயக்குனர்கள் சபரி கிரீசன் மற்றும் சரவணன் இணைந்து இயக்குகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(பிப்., 14) பூஜையுடன் துவங்கியது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் பட பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.