ஆகஸ்டில் ரஜினி 169 துவக்கம்
ADDED : 1330 days ago
அண்ணாத்த படத்திற்கு பின் ரஜினியின் 169வது படத்தை இயக்க பலர் முயற்சித்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ள நெல்சன் இந்த படம் திரைக்கு வந்ததும் ரஜினியின் படத்தை ஆரம்பிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருக்கிறது.