9 ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கத்தில் "இறைவன் மிகப்பெரியவன்"
ADDED : 1376 days ago
'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்' ,'ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தினார். யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் இயக்கும் புதிய படத்திற்கு இறைவன் மிகப்பெரியவன் என தலைப்பு வைத்துள்ளார்.
இந்த படத்திற்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளனர். பட பிடிப்பு விரைவில் துவங்குகிறது. ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அமீரின் வழக்கமான கூட்டணியான ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.