17 லட்சத்திற்கு பைக் வாங்கிய வெற்றிமாறன்
ADDED : 1360 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். சொந்த வாழ்க்கையிலும், இயல்பிலும் மற்ற இயக்குனர்களிடமிருந்து மாறுபட்டவர். ஆங்கில இலக்கியம் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர். இப்போதும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர். இவரது இன்னொரு முகம் அவர் பைக்குகளின் காதலர். வெற்றிமாறனுக்கு எப்போதும் பைக் பயணம் மிகவும் பிடிக்கும். வேலூர் அருகில் உள்ள அவரது சொந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்து செல்வார்.
தற்போது 17 லட்சம் ரூபாய் மதிப்புகள் பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது அவரது கனவாம், அது இப்போது நிறைவேறி இருக்கிறதாம். தற்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி இருப்பதாலும், பல இடங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாலும் சென்னைக்குள் சென்று வர அவர் அந்த பைக்கையே பயன்படுத்துகிறார்.