மோகனுக்கு ஜோடியாகும் குஷ்பு
ADDED : 1390 days ago
1980களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் மோகன். அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்ஸ்ரீ இயக்கும் ஹரா என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்தப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டபோதும் அவர் பிஸியாக நடித்து வந்த காலகட்டத்தில் மோகனுடன் தமிழில் மட்டும் நடிக்கவில்லை. அதேசமயம் தெலுங்கில் ஒரு படத்தில் அவருடன் நடித்துள்ளார்.