ஷிவானியின் கலக்கல் கிளாமர் போட்டோ
ADDED : 1344 days ago
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிக்பாஸ் சீசன்- 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பொன்ராம் இயக்கும் படங்களிலும் நாயகியாக நடிக்கிறார். மேலும் சோசியல் மீடியாவில் அதிரடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது கருப்பு நிற புடவை அணிந்து தான் எடுத்துள்ள கலக்கலாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகின.