அஜித்தின் புதிய படத்திற்க்காக மவுண்ட் ரோடு செட்
ADDED : 1381 days ago
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைகிறார் அஜித் குமார். வலிமை படம் வருகிற 24-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு இந்த படத்திற்காக சென்னையில் உள்ள மவுண்ட் ரோட்டை பிரமாண்டமாக செட் போடும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன. அஜித்தின் வலிமை படம் வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த புதிய படத்தை குறுகிய காலத்தில் படமாக்கி, வருகிற தீபாவளிக்கு வெளியிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளனர்.