உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆங்கில படத்திற்கு இசை அமைக்கிறார் இளையராஜா

ஆங்கில படத்திற்கு இசை அமைக்கிறார் இளையராஜா

இந்தோ - ஆங்கில படமாக உருவாகிறது ஏ பியூட்டிபுல் பிரேக்அப். அஜித்வாசன் உக்கினா இயக்குகிறார். 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் என்ற இங்கிலாந்து நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக நடிகர்களான க்ரிஷ் மற்றும் மட்டில்டா ஆகியோர் நடிக்கின்றனர். எ பியூட்டிபுல் பிரேக்அப் இளையராஜாவின் 1,422வது படம். கே.ஆர். குணசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். இளையராஜா இதற்கு முன்பும் பல ஆங்கில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !