பிரிட்டிஷ் நடிகருடன் டேட்டிங் செல்லும் எமி ஜாக்சன்
ADDED : 1335 days ago
மதராசபட்டிணம் படத்தில் அறிமுகமான லண்டன் நடிகை எமி ஜாக்சன், அதன் பிறகு தாண்டவம், தங்கமகன், தெறி, 2.ஓ என பல படங்களில் நடித்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த எமி ஜாக்சன் அவர் மூலமாக ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டார். பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து இருந்த எமிஜாக்சன் திடீரென்று காதலர் ஜார்ஜை விட்டுப் பிரிந்தார்.
இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது பிரிட்டிஷ் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விருது வழங்கும் விழாவில் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் இப்போது காதலாகி விட்டதாம். நடிகர் எட் வெஸ்ட் விக், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து பிரேக்கப் செய்தவர் ஆவார்.