திரைக்கு வராத படத்தின் பாடல் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
ADDED : 1380 days ago
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், விக்ரமின் கோப்ரா , சிவகார்த்திகேயனின் அயலான், பார்த்திபனின் இரவின் நிழல் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிலையில் இன்று தனது சமூகவலைதளத்தில் தான் கம்போஸ் செய்த ஒரு பாடல் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதோடு இந்த பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் எந்த படத்தில் இடம் பெறப்போகிறது? என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் ரஹ்மான். அதையடுத்து பலரும் தற்போது ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கி உள்ள இரவின் நிழல் படத்திற்கான பாடல் தான் என தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.