பிப்., 18ல் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" டீசர் வெளியீடு
ADDED : 1410 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு டீசர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.