நானி - கீர்த்தி சுரேஷின் "தசரா" துவங்கியது
ADDED : 1351 days ago
ஷ்யாம் சிங்கா ராய் படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவருடன் தசரா எனும் படத்தில் நானி நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இன்று தசரா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. புஷ்பா பட இயக்குனர் சுகுமார் பட பூஜையில் கலந்து கொண்டார். இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கிராமப்புறக் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.