உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வலிமை' ஜுரம் ஆரம்பம்…

'வலிமை' ஜுரம் ஆரம்பம்…

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் 'வலிமை' படம் அடுத்த வாரம் பிப்ரவரி 24ம் தேதி வியாழன்று வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் கொரோனா பரவல் காரணமாக ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியாக உள்ளது.

வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் 'வலிமை' படம் பற்றி பரபரப்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த சில மாதங்களாக 'அப்டேட், அப்டேட்' எனக் கேட்டு வந்தவர்கள், இப்போது 'அதிகாலை காட்சி' என பேசி வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றாலே அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சியை திரையிடுவார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக காலை 8 மணிக்குத்தான் சிறப்புக் காட்சிகளை அனுமதிக்கிறார்கள்.

அஜித் நடித்து வெளிவந்த 'விஸ்வாசம்' படத்திற்கு அதிகாலை 1 மணி சிறப்புக் காட்சிகள் நடைபெற்றன. அது போல 'வலிமை' படத்திற்கும் காட்சிகள் நடக்காதா என அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் சிறப்புக் காட்சிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !