உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து கனெக்ட் என்ற படத்தில் நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்திலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து பல பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நயன்தாரா, நேற்று கேரளா எர்ணாகுளத்தில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். இந்த கோயிலில் ஏழாவது நாள் திருவிழாவையொட்டி மகம் நட்சத்திரத்தில் சாமி தரிசனம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், நீண்ட நேரம் காத்திருந்து மகம் நட்சத்திரத்தில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் நயன்தாரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !