உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை

தான் இசையமைத்த படங்களின் பாடல்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதோடு பாடல்களுக்கு உரிய காப்புரிமை பெறாமல் பயன்படுத்துவது ஒளிப்பதிவு சட்டப்படி தவறு. பதிப்புரிமை என்பது எந்த ஒரு மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்த ஒரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான பிரத்யேக உரிமை என்றும் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வந்த எக்கோ, அகி மியூசிக் போன்ற நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்து இருக்கிறது. அதோடு, எக்கோ, அகி, கிரி டிரேட்டிங், யூனிசிஸ் ஆகிய இசை நிறுவனங்கள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !