சன்னி லியோனிடம் நடந்த ஆன்லைன் பணமோசடி
ADDED : 1322 days ago
ஹிந்தி மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும் பரவலாக நடித்து வருபவர் சன்னி லியோன். தற்போது தமிழில் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் ஆன்லைன் மோசடி நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார் சன்னி லியோன். அதில், யாரோ சில முட்டாள்கள் என்னுடைய பான் கார்டு நம்பரை பயன்படுத்தி 2000 ரூபாய் கடன் பெற்று உள்ளார்கள். இதன் காரணமாக எனது சிபில் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தனக்கு எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை. இது ஏன் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த பிரச்னையை விரைவில் சரி செய்வதாக உறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.