முட்டாள்கள் தினத்தில் வெளியாகும் மிர்ச்சி சிவாவின் 'இடியட்'
ADDED : 1323 days ago
மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வெளியாக இருக்கின்ற படத்தை 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியுள்ளார். மயில்சாமி, ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, ஆனந்த ராஜ் ஆகியோர்கள் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் முட்டாள்களின் தினமான ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.