உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமல் - விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விமல் - விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் சீரியஸ் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் சரவணசக்தி இயக்கிவரும் புதிய படத்தில் விமலுடன் விஜய் சேதுபதி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !