உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இறைவன் மிகப் பெரியவன் - பாடல் பதிவை ஆரம்பித்த யுவன்

'இறைவன் மிகப் பெரியவன் - பாடல் பதிவை ஆரம்பித்த யுவன்

இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு கூட்டணி. 'மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன், ஆதி பகவன்' ஆகிய படங்களில் இணைந்தவர்கள் சுமார் 9 வருட இடைவெளிக்குப் பிறகு 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

இப்படத்தின் அறிமுக விழா கடந்த வாரம்தான் நடைபெற்றது. இந்தக் கூட்டணி மீது இருவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். உடனடியாக படத்தின் பாடல் பதிவு வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இது குறித்து யுவன் கூறுகையில், “22..02.2022 என்ற சிறப்பு நாளில் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்திற்கான பாடல் பதிவு நடந்தது” என தெரிவித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள 'வலிமை' படம் நாளை மறுதினம் (பிப்., 24) வெளிவர உள்ள நிலையில் யுவனின் எதிர்பார்ப்புக்குரிய இந்த புதிய படத்தின் அப்டேட் யுவன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !