உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப் சீரியஸாக வரும் பிரபல சீரியல்

வெப் சீரியஸாக வரும் பிரபல சீரியல்

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் சின்னத்திரையிலும் பல தரமான தொடர்களை கொடுத்து வந்தார். அந்த வரிசையில் நகைச்சுவை தொடராக வெளிவந்து ஹிட் அடித்தது ரமணி வெசஸ் ரமணி. தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரமணி வெசஸ் ரமணி சீசன் 3 குறித்தான அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இதில் ராம்ஜி மற்றும் வாசுகி ஆனந்த் இணைந்து நடிக்கின்றனர். தொலைக்காட்சி தொடராக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெப்சீரிஸாக உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். இதனை பிரபல ஓடிடி தளமான ஆஹா ஒரிஜினல் நிறுவனம் வெளியிடுகிறது. மார்ச் 4ல் தேதி ரமணி வெசஸ் ரமணியின் முதல் எபிசோடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !